மழை வெள்ளத்தால் செங்கத்துறை தடுப்பணை சேதம் - சீரமைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.


கோவை: தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் மழையால் சேதமடைந்த தடுப்பணையை இதுவரை சீரமைக்கவில்லை என பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் சேதமடைந்த செங்கத்துறை தடுப்பணையை சரி செய்து தர வலியுறுத்தி பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், தடுப்பணை சேதம் அடைந்ததனால் அப்பகுதியை சுற்றிலும் உள்ள சுமார் 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக தாசில்தார், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலகம், முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தடுப்பணையை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அப்பணிகள் எந்த துறையை சார்ந்தது என்பது தெரியாத பட்சத்தில் விவசாயிகளே அணையை சீரமைத்துக் கொள்ள அனுமதி அளிக்குமாறும் மனுவில் பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...