இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் - 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டிபிரிவிலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



கோவை: தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாமில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். குறைபாடு இருந்த ஒருசில மாணவர்களை பெற்றோர்களுடன் மருத்துவமனைக்கு நேரில் வருமாறு மருத்துவர்கள் கூறினர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டிபிரிவிலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பல் பரிசோதனை முகாம் தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

இந்த முகாமை தமிழம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் இரா. பழனிச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் இரா.ப.அரவிந்தன் முன்னிலை வகித்தார்.



இந்த பரிசோதனைகளை தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்த வாசன் ஐ கேர் சார்பில் மார்கெட்டிங் மேனேஜர் பத்மநாதன் தலைமையில் மருத்துவர்கள் பாலா, முகமது மற்றும் ரூபிகா ஆகியோரும், காரமடை வினிஸ் பல் மருத்துவமனையில் இருந்து டாக்டர்.மெல்சிஜிடெக் மற்றும் டாக்டர்.வசுந்தரா ஆகியோரும் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் பல் சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொண்டு குறைபாடுகளை மாணவர்களிடம் கண்டறிந்தும், அதற்கான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.

ஒரு சில மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலை இருப்பதால் அவர்களை அவர்களது பெற்றோருடன் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இந்த முகாமில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பெ.பாஸ்கர் தலைமையில் துணை முதல்வர் ஷிபா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...