பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை எடுக்க வேண்டும்..! போராட்டம் நடத்தி அதிமுக எதிர்ப்பு.!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 1850 எண் கொண்ட டாஸ்மாக் கடையால், பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: பல முறை புகார் அளித்தும் டாஸ்மாக் கடையை எடுக்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவு வேறமாதிரி இருக்கும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொச்சின் நெடுஞ்சாலையில் 1850 எண் கொண்ட டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த கடையில் பார் வசதி கிடையாது. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்திவரும் இந்த சாலையில் டாஸ்மாக் கடைக்கு அருகே நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு சாலையிலேயே அமர்ந்து நிதானமாக மது அருந்திவிட்டு சாலை ஓரமாகவே அலங்கோலமாக துணி விலகியது கூட தெரியாமல் சாலையில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் பெண்கள் குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள இப்பகுதியில் டாஸ்மாக் கடையால் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வை சேர்ந்த எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.



இந்நிலையில் நடவடிக்கை எடுக்காததால் இன்று அதிமுக சார்பில் பல்லடம் நகர தலைவர் ராமமூர்த்தி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...