நீலகிரியில் யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருககேயுள்ள செம்பக்கொல்லி பகுதியை சேர்ந்த குட்டன் என்பவர் இரண்டு மாதத்திற்கு முன்பு யானை தாக்கி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை ரூ.5 லட்சத்தில் ஏற்கனவே ரூ.50,000 வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ரூ.4.5 லட்சம் ரூபாய் இன்று வழங்கப்பட்டது.


நீலகிரி: கூடலூர் அடுத்த செம்பகொல்லி பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரணத் தொகை இன்று வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவா்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்த குட்டன். இவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தாா்.

இந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு வனத்துறை சாா்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது

இதில் ஏற்கெனவே ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படது. தற்போது மீதமுள்ள ரூ.4.50 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை தரப்பட்டு உள்ளது.

இதனை வனத்துறை அதிகாரிகள் யானை தாக்கி பலியான குட்டன் குடும்பத்தினரிடம் வழங்கினா்.

அப்போது பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன், வனவா் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...