கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்! கோவையில் திமுகவினர் போஸ்டர்

கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுகவினர் போஸ்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தினமலர்(திருச்சிப்பதிப்பு) நாளிதழில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி தலைப்புடன் செய்தி வெளியாகியிருந்தது.

அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும், தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டங்களும் நடைபெற்றன.

அரசு பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...