பல்லடத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.6 விற்பனை - தலையில் முக்காடு போட்டு வேதனை தெரிவித்த விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி வெறும் ஆறு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் சொல்லன்னா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகளவில் தக்காளியை சாகுபடி செய்யப்பட்டதும், வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகமாக இருப்பதுமே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தமிழக அரசு ஒள்முதல் செய்து விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுகொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட தக்காளியை வாங்கமுடியாமல் நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டனர். இந்நிலையில் படிப்படியாக குறையத்தொடங்கிய தக்காளி விலை தற்போது பத்து ரூபாய்க்கு கீழ் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.



விலை குறைந்ததை தொடர்ந்து, இன்று காலை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் சந்தை விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு வேதனையை வெளிப்படுத்தினர். இது குறித்து பல்லடம் உழவர் சந்தை விவசாயிகள் கூறுகையில், ' தக்காளி விலை உயர்வடைந்ததை தொடர்ந்து அதிகப்படியான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டதால் உற்பத்தி அதிகரித்தது.

அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி இறக்குமதியானதால் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பத்து ரூபாய்க்கு கீழ் கொள்முதல் செய்யப்படுவதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ' ஏற்கனவே தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகளை மேலும் பாதித்துள்ளது. தக்காளி விலை உயர்ந்த போது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கூட்டுறவு சொசைட்டி மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அதுபோல் தற்போது தக்காளி விலை வீழ்ச்சியால் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளிடமிருந்து தக்காளிகளை போதிய விலைக்கு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக, நேற்று கிலோ பத்து ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி, இன்று ஆறு ரூபாய்க்கு கொள்முதல் ஆனது. இதையடுத்து, தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில், விவசாயிகள், தலையில் முக்காடு அணிந்து வேதனையை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...