கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரனை

கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருந்த ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து தோட்டாக்கள் மற்றும் கரி மருந்துகளும் பறிமுதல்.



கோவை: நாட்டு துப்பாக்கி, பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவற்றை நபர் ஒருவர் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப்பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும், பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவை வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்தது உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என தெரிய வந்தது.

இதனைடுத்து ஞானசேகரனை தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு துப்பாக்கிகளை கைப்பற்றி ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...