கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்ததில் ஒருவருக்கு கை துண்டானது


ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் பூமாரி, கூலி வேலை செய்து வருகிறார். இவர், இன்று காலை கோவையிலிருந்து சென்னை செல்லும் இண்டர்சிட்டி ரயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் போது அதில் ஏற முயன்றுள்ளார். 

இதற்குள்ளாக ரயில் புறப்படத்தொடங்கவே நிலைதடுமாறிய பூமாரி தவறி கீழே விழுந்ததில் அவரது கை மீது ரயில் சக்கரம் ஏறியுள்ளது. இதில் பூமாரியின் கை துண்டானது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் துண்டான கையுடன் வலியில் தவித்துக் கொண்டிருந்த பூமாரியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி ரயில் 20 நிமிடம் தாமதமாக புறபட்டு சென்றது. இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...