மதுபோதையில் பள்ளி வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு உறங்கிய வாகன ஓட்டுனர் - பரபரப்பு!

கோவைபுதூர் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியின் வாகனம் பள்ளி குழந்தைளுடன் குருசாமி நகர் பகுதியில் நடுரோட்டில் நின்றுள்ளது. விசாரணையில் ஓட்டுனர் செந்தில் குடிபோதையில் வாகனத்தை ஓட்ட முடியாமல் மயங்கியது தெரியவந்தது. இந்நிலையில், ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவைபுதூர் அருகே மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு மதுபோதையில் வாகன ஓட்டுனர் உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவைபுதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் சிலர் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்று பின்னர் பள்ளி முடிந்தவுடன் அழைத்துச் செல்வார்கள். அதேபோல ஒரு சில குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியின் வாகனத்தில் அனுப்பி வைப்பார்கள்.

அதன் அடிப்படையில் கோவைபுதூரில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அப்பள்ளியின் காண்ட்ராக்ட் வாகனங்கள் சென்று குழந்தைகளை ஏற்றி வரும் நிலையில் வடவள்ளியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனம், குருசாமி நகர் பகுதியில் நடுரோட்டில் நின்றது.



அப்போது சென்று பார்த்த பொழுது அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் உறங்கி கொண்டு இருந்துள்ளார். இது குறித்து விசாரித்த பொழுது, அந்த ஓட்டுனரின் பெயர் செந்தில் என்பதும் அவர் தலைக்கேறிய மது போதையில் வாகனத்தை ஓட்ட முடியாமல் தத்தளித்து ஸ்டேரிங் மேலே உறங்கியது தெரியவந்தது.



இதுகுறித்து பெற்றோர்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். உடனடியாக பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு 12 குழந்தைகளும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



மது போதையில் வாகனத்தை ஓட்டி அலட்சியப்படுத்திய ஓட்டுனர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...