திருப்பூரில் மின்மாற்றியில் சிக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழப்பு..!! இரைத்தேடி வந்தபோது பரிதாபம்.!

திருப்பூரில் மின்சாரம் தாக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர்: இறைத்தேடி வந்த தேசிய பறவையான மயில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த மயிலின் உடலை அடக்கம் செய்வதற்காக வனத்துறையினர் எடுத்துச்சென்றனர்.

தேசிய பறவையான மயில் நாள்தோறும் இரைத் தேடி திருப்பூர் நகர் பகுதியில் வலம் வருவது வழக்கம்.



இந்நிலையில் திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இறைத்தேடி வந்த மயில் ஒன்று மின்மாற்றியில் அமர்ந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.



இதனைப்பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த நிலையில் மயிலை மீட்டனர்.

உயிரிழந்த இந்த ஆண் மயிலுக்கு ஒன்றரை வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அடக்கம் செய்வதற்காக மயிலின் உடலை வனத்துறையினர் எடுத்துச்சென்றனர். மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...