மனை வரன்முறை சட்டத்தை 6 மாத காலம் நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நன்றி!

கோவை விமான நிலையத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் ஹென்றி, அங்கீகாரம் பெறாத பட்டா மனைகளை வாங்கியுள்ளவர்களுக்காக, மனை வரன்முறை சட்டத்தை 6 மாத காலம் நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.



கோவை: மனை வரன்முறை சட்டத்தை 6 மாத காலம் நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் ஹென்றி நன்றி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,



அங்கீகாரம் பெறாத பட்டா மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் தங்களின் பட்டா மனைகளை டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பினை வழங்கும் வகையில், மனை வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றி.

மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் பகுதியில் (HACA) அமைந்துள்ள பட்டா மனைகளையும் வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

பதிவுத்துறையில் பொது அதிகார கட்டணம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்திற்கான பதிவு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்கு கட்டண உயர்வு, கட்டுனர்களால் புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யும் போது முதலில் வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மனையை மாத்திரம் பதிவு செய்யும் வகையில் வழிவகை இருந்தது.

தற்பொழுது இதனை மாற்றியமைத்து கட்டாயம் மனை மற்றும் கட்டிடத்துடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்தரவு,போலி ஆவணம் ரத்து சட்டம் சட்டப்பிரிவு 77Aவிற்கு தற்பொழுது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடை.

சொத்தின் மீதான வழிகாட்டி மதிப்பு முரண்பாடு உள்ள பகுதிகளில் குறைவு முத்திரைத் தீர்வை சட்ட பிரிவு 47/A1 இன் கீழ் பதிவு செய்ய மறுப்பு, பதிவு அலுவலகங்களில் பதிவு நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள்.

நாடு முழுவதும் வழிகாட்டி மதிப்பு பன்மடங்கு உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்தும் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...