நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா -  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வர சக்தி விநாயகர் கோவிலில் கடந்த பத்தாம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கியது. இன்றைய தினம் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



கோவை: நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசிக்தி விநாயகர் கோயிலில் முதலாம் ஆண்டு விழா வள்ளி தெய்வானை கல்யாணம், சுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபோக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 10ம் தேதி மாலை மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவிய பூஜை, வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், யாகசலா பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், மஹா பூர்ணாஹிதி, à®¤à¯€à®ªà®¾à®°à®¾à®¤à®©à¯ˆ நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் தொடங்கிய பூஜையில் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் இருந்த மூலவர் வரசித்தி விநாயகருக்கு 108 பால் குடத்துடன் வாதியத்துடன் ஊர்வலமாக வந்து அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான மூலவர் வரசித்தி விநாயகர்க்கும் மற்றும் புதியதாக செய்யப்பட்டுள்ள உற்சவ திருமேனிகளுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேகத்தின் போது நரசிம்ம நாயக்கன் பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகர் தரிசனம் பெற்றனர். 



தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானமும் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...