திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம்!

திருப்பூரில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள போதை எதிர்ப்பு மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக பிரச்சார நடைபயணம் மேற்கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடானது வரும் 26ஆம் தேதி திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.



இந்த மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதை பொருளுக்கு எதிராகவும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய நடை பயணமானது, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.



இதில் மாதர் சங்கத்தினர் ஏறாளமானோர் கலந்து கொண்டதோடு, மதுகடைகளுக்கும், போதை பொருட்களுக்கு எதிரக எழுதப்பட்ட பதாகைகளை கையில் எந்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு நடைபயணம் மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...