ஜனநாயகத்தை மீட்கக்கூடிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பேட்டி

மின் கட்டண உயர்வு , நிலை கட்டணம் உயர்வு உள்ளிட்டவை மத்திய மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்று திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்.



திருப்பூர்: ஜனநாயகத்தை மீட்கக்கூடிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் INDIA கூட்டணி தனது வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கூறியுள்ளார்.

திருப்பூரில் வருகின்ற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியாதவது,



ஜனநாயகத்தில் இல்லாத ஒரு நடைமுறையாக சிறப்பு கூட்டத்தொடரில் எந்த பொருள் குறித்து விவாதம் நடைபெறப்போகிறது என்பது குறித்து இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. பல்வேறு வதந்திகள் பரவக்கூடிய நிலையில் அது பற்றி தற்போது தெரிவிக்க முடியாத சூழலில் சிறப்பு கூட்ட தொடரில் விலைவாசி ஏற்றம் , வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஆனால் அவை மத்திய அரசு செய்யத் துணியாது. நல்ல காலம் பிறக்கப் போவதாக வாக்கு கேட்ட பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்த பிறகு ரேஷன் கடைகளில் 12 ருபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் மோடியின் நல்ல காலமா ? என கேள்வி எழுப்பினார்.

திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து வரக்கூடிய நிலையில் மோடி அரசு அப்புறப்படுத்தினால் மட்டுமே திருப்பூர் தொழில் துறை காப்பாற்றப்படும். தற்போது நடைபெற்று வருவது ஜனநாயகத்தை மீட்க கூடிய போராட்டம். நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்வார்கள்.

மின் கட்டண உயர்வு , நிலை கட்டணம் உயர்வு உள்ளிட்டவை மத்திய மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும். பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்தை தன்னோடு கூட்டணி சேர்த்து இருக்கிறது.

இந்நிலைமாறி நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என்றால் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும். இந்தியா கூட்டணி மத்திய தேர்தலில் வெற்றி பெறும் என்ற மத்திய உளவுத்துறையில் தகவலின் காரணமாக பதற்றத்தில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...