பிரதமர் மோடியின் பிறந்தநாள் - கோவையில் பாஜக சார்பில் தாமரை திருமண விழா

பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாளையொட்டி, கோவை போத்தனூர்-செட்டிப்பாளையம் சாலையில் பாஜக சார்பில் தாமரை திருமண விழா நடைபெற்றது.



கோவை: பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவில் 73 ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம் மற்றும் 73 குடும்பங்களுக்கு 73 நாட்டு மாடுகள் வழங்கப்பட்டன.

கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி

போத்தனூர்- செட்டிப்பாளையம் சாலையில் 73 ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம் மற்றும் 73 குடும்பங்களுக்கு 73 நாட்டு மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



தாமரை திருமண திருவிழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த திருமண விழா கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.



இதில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்துமணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர் .சேகர், பாஜக பார்வையாளர் சுதாகர் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோமாதா பூஜை நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...