மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தின் நிலை என்னை? - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.



திருப்பூர்: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு முதற்கட்டமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் விண்ணப்பம் செய்து எந்த ஒரு குறுந்தகவலும் பெறாதவர்கள் மற்றும் பணம் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனையொட்டி தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...