திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் -1001 விநாயகர் சிலைகள் கரைப்பு

திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ஆயிரத்து ஒரு பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சமளாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: பிரம்மாண்டமான 10 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 20 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை என ஆயிரத்து ஒரு விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.



திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் 1001 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு வழிபாடுகள் செய்யபட்டன.

அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விசர்சன ஊர்வலம் மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டது.



அதில் பிரம்மாண்டமான 10 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 20 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலைகள், உள்ளடக்கிய ஆயிரத்தி ஒரு விநாயகர் சிலைகள், புதிய பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, செல்லம் நகர் ஆகிய மூன்று இடங்களில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலங்காடு பகுதியில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் அனைத்து சிலைகளும் மங்களம் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சமளாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...