தாராபுரம் உணவகங்களில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை - கெட்டு போன உணவு குறித்து ஆய்வு

திருப்பூர் மாவட்டம் தாரபுரம் நகராட்சியில் இயங்கி வரும் ஷவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் உணவுப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் அசைவ உணவகங்கள் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது.

அதன்படி திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், தாராபுரம் பகுதி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் சிரஞ்சீவி, பாலமுருகன், கோடீஸ்வரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தாராபுரம் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, அலங்கியம் சாலை, ஐந்து சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகள், ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஆய்வில் அதிக செயற்கை வண்ணம் கலக்கப்பட்ட 3 கிலோ சிக்கன், 2 கிலோ அளவிலான பரோட்டா, 3 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.



பின்னர், உணவக உரிமையாளர்களிடம் நாள்தோறும் புதிதாக வாங்கப்பட்ட சிக்கன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில் தரமற்ற சிக்கன் மற்றும் உணவுப் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...