ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை - வெள்ளத்தில் சிக்கிய கார்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர் மழையால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணியை தாண்டியும் நீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்களும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்களும் இந்த மழை காரணமாக கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதே போல் விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கியதால் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

ஊட்டியில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் ரெயில்வே பாலத்தின் கீழ் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கியது.

இதன் காரணமாக அந்த வழியாக வந்த 2 கார்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தன. அவ்வழியாக வந்தவர்கள் உதவியுடன் கார் உரிமையாளர்கள் காரை ஓரமாக தள்ளி சென்று நிறுத்தினர்.

சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க ஆங்காங்கே இருந்த குடைகளின் கீழ் நின்றனர்.

நீண்ட நேரம் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர்.

ஊட்டியை போன்று மஞ்சூர், எமரால்டு பாலாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...