சூலூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி - ஆகழ்வாராய்வு பணியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே கிடைத்த எலும்பு கூடுகள் நிறைந்த முதுமக்கள் தாழியை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் கடந்த 60 வருடங்களாக அப்பகுதியில் வசித்து வருகிறார்.



பழைய வீடாக இருந்த அவருடைய வீட்டை புதுப்பித்து புதிய வீடு கட்டி வருகிறார். அதற்காக குடிநீர் தொட்டி தோண்டும் போது தோண்டப்பட்ட இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை எடுத்த பொன்னுச்சாமி இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் தொல்பொருள் ஆராய்ச்சி அலுவலர்களிடமும் தெரிவித்துள்ளார்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த அகழ்வாராய்ச்சி செய்யும் பணியினை மேற்கொண்டனர்.



இந்த முதுமக்கள் தாளியுடன் செப்பு சாமான்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாளியில் இறந்தவரின் எலும்பு கூடுகளும் இருந்துள்ளது.

இதனை தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் கோவையில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். எலும்புகூடுகள் கண்டெடுக்கப்படிருப்பது இப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொன்னுச்சாமி பேசும்போது, 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது வீடு கட்டுவதற்காக குழி தோண்டும் போது கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் பேசும் போது, 2000 ஆண்டு பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதுமக்கள் தாலியை கோவையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி அருங்காட்சியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...