ரூ. 2 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கியது உடுமலை தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை!

10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோயில் அரங்கில் நடைபெற்றது.



இதில் பத்தாம் வகுப்பில் 11 பேருக்கும், 12-ம் வகுப்பில் 6 பேருக்கும் கல்வி பரிசளிப்பாக சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் , கல்வி உதவித்தொகையாக 15 பேருக்கு சுமார் 2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.



மேலும் 75 வயதைக் கடந்த 32 முதியோர்களுக்கு கௌரவம் செய்து நினைவு பரிசு வழங்கினர்.



பின்னர் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் முத்தோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவாங்கர் சமூக சங்கம் மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மாணிக்கம், மெடிக்கல் திருமலை சாமி, சீனிவாசன் சௌந்தர்ராஜன் ஞானமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...