எனக்கும் கோவைக்கும் சிறுவயதில் இருந்தே நல்ல உறவு - நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி

சினிமா துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே சினிமா தொழில் நிலைத்திருக்க முடியும் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவைக்கும், தனக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.



கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தனியார் கண் மருத்துவமனையை நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,



இணையத்தில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து கண் தானம், உடல் உறுப்பு தானம் போன்ற நல்ல விஷயங்களை இணையதளம் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் திரைப்படங்களில் சிகரெட் பிடித்தல் காட்சிகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசு கூறும் அறிவுரைகள் பின்பற்றப்படுகிறது என தெரிவித்தார். கோவைக்கும் எனக்கும் எப்போதும் ஒரு நல்ல உறவு உள்ளது. சின்ன வயதில் என் தந்தையுடன் வந்த அனுபவம் உள்ளது. இங்குள்ள பலருடன் நெருங்கிய உறவு உள்ளது. அவர்களை போனில் தான் தொடர்பு கொள்ள முடிகிறது. அவர்களை இதுவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கர்நாடகத்தில் நடிகர் சித்தார்த்க்கு நடந்த சம்பவம் குறித்து எனக்கு தகவல் தெரியவில்லை.

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அமல் படுத்த வேண்டும். கோவையில் சினிமா துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சினிமா துறையில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். திரைப்படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தற்போது குறைவாக இல்லை.அந்த காலத்தில் தொடாமல் பேசினர். இப்போது காலத்திற்கு ஏற்ப அந்த நிலை மாறியுள்ளது. இப்போது வித்தியாசமான கதைகள் வருகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. என் சந்திரமுகி-2 தற்போது திரைக்கு வந்துள்ளது.

அடுத்து துருவ நட்சத்திரம் திரைப்படம் வர உள்ளது. தவிர, சீரியல், வெப்சீரிஸ்கள் நிறைய செய்கிறேன். டிஜிட்டலுக்கு தரமான தயாரிப்பாளர்களை விரும்புகிறேன். அந்த பிளாட்பார்ம்-க்கு நானும், என் கணவரும் மீண்டும் கொண்டு வந்து உள்ளோம். பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு ரொம்ப வருடம் பேசப்பட்டது. தற்போது அமல் படுத்தப்பட்டது. அதனை சரியாக செயல்படுத்த வேண்டும். அதுபோல நாமும் இந்த விஷயத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும். தற்போது ஆன்லைன் விமர்சகர்கள் வந்துள்ளனர். அவர்களை தவிர்க்க முடியாது. அவர்கள் அதை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களை நிறுத்த கூற முடியாது.‌நாம் தான் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...