கோவையில் பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் மினியேச்சாரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்பளிப்பாக அளித்தார்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபாலசாமி நாயுடு பள்ளியில், மாணவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். பின்னர், சந்திராயன் மினியேச்சாரை மாணவர்களுக்கு பரிசாக அளித்தார்.


கோவை: தூய்மை பாரத திட்டத்தை முன்னிட்டு வங்கி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளார். தூய்மை பிரச்சார திட்டம், கடனுதவி வழங்கும் விழா, கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.



இந்நிலையில் பீளமேடு பகுதியில் உள்ள கோபாலசாமி நாயுடு பள்ளிக்கு சென்ற அவர், அப்பள்ளி மாணவ மாணவியருடன் விஞ்ஞானம் குறித்து கலந்துரையாடினார். நிகழ்வின் போது பேசிய அவர் சந்திராயன் வெற்றி நமக்கு மிகவும் பெருமை அளிக்கும் ஒன்று.தமிழகத்தை சேர்ந்த பலரும் சந்திராயன் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சந்திராயன் மினியேச்சர் மாடலை பள்ளி மாணவர்களுக்கு காண்பித்து அது குறித்து விளக்கிய அவர் பள்ளி மாணவர்களுக்கு அதனை பரிசாக அளித்தார்.

பின்னர் அப்பள்ளியின் முன்னாள் மாணவி சந்திர பிரபா தற்பொழுது இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் நிலையில் அவர் வடிவமைத்த சாட்டிலைட் மாடல் ஒன்றை பள்ளி நிர்வாகத்தினர் மத்திய நிதி அமைச்சருக்கு காண்பித்தனர். மேலும் அப்பள்ளியை சேர்ந்த ஹரிஸ் என்ற மாணவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு வந்ததை தொடர்ந்து அம்மாணவருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார் பாராட்டினார்.



முன்னதாக அப்பகுதியில் தூய்மை பாரத திட்டத்தை முன்னிட்டு வங்கி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...