தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை உறுதி மொழி

மகாத்மா காந்தி பிறந்த நாளில் மக்கள் ஒற்றுமை காத்திட வேண்டும் என்று தாராபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒற்றுமை உறுதி மொழி ஏற்கப்பட்டது.


திருப்பூர்:நாம் சாதிய சிந்தனையை தூக்கி எறிவேம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மகாத்மா காந்தி பிறந்த நாளில் மக்கள் ஒற்றுமை காத்திட, மத நல்லிணக்கம் பேணிட, சாதி, சமயம், பேதமற்ற சம உலக சமத்துவம் படைத்திட அரசு ஊழியர்கள் மக்கள் ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம் என்று மக்கள் ஒற்றுமை உறுதி மொழி ஏற்கும் கூட்டம், தாராபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமையில் நடைபெற்றது.



அப்போது அரசு ஊழியர்கள் நாம் சாதிய சிந்தனையை தூக்கி எறிவேம், மத ரீதியிலான பாகுபாட்டை உடைத்து எறிவேம் என்பன உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து காந்தி பிறந்த நாளில் 100-க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்ட கிளை தலைவர் செந்தில் குமார், மாவட்ட பொருளாளர் முருக சாமி உள்ளிட்ட மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...