வால்பாறையில் கோவில் கட்டிடங்கள், கொய்யா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

வால்பாறை அருகே புது தோட்டம் எஸ்டேட்டில் உள்ள 10 ஏக்கரா பகுதியில் பட்டப்பகலில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து தோட்டத்தில் இருந்த கொய்யா மரங்களை சேதப்படுத்திவிட்டு அருகில் இருந்த முனீஸ்வரன் கோவில் கட்டிடங்களை இடித்து தள்ளி அட்டகாசத்தில் ஈடுபட்டது.


கோவை: குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் அவற்றை விரட்ட வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வனத்துறையினரை கேட்டுக்கொண்டனர்.



வால்பாறை அருகே முனீஸ்வரன் கோவில் கட்டிடங்களையும் குடியிருப்பு அருகில் உள்ள கொய்யா மரங்களையும் காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தயது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் தோட்டங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது.

இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வால்பாறை அருகே புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் 10 ஏக்கரா பகுதியில் இரண்டு காட்டு யானைகள் பட்டப்பகலில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகில் உள்ள தோட்டத்தில் கொய்யா மரத்தை உடைத்து பழங்களை சாப்பிட்டு கொய்யா மரத்தை வேரோடு தள்ளியது.



அதேபோல் அப்பகுதியில் இருக்கும் முனீஸ்வரன் கோவில் வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் செட் ஆகியவைகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து வன பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...