பல்லடத்தில் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாடச் சென்ற 3 இளைஞர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரத்தில் இரவு நேரத்தில் விலங்களை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


திருப்பூர்: ஆவணங்கள் இல்லாம் நாட்டு துப்பாக்கியை வைத்து விலங்குகளை வேட்டையாட சென்ற மூன்று இளைஞர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் துப்பாக்கியுடன் வலம் வருவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாணிக்காபுரம் சாலையில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது 3 இளைஞர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் காட்டு பகுதியில் வலம் வந்து கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் அவர்கள் அறிவொளி நகர் குறவர் காலனி பகுதியை சேர்ந்த பூவரசன், ஹரிகிருஷ்ணன் மற்றும் சக்திவேல் என்பதும், காட்டுப்பகுதியில் முயல், காடை, கொக்கு போன்ற பறவை மற்றும் விலங்குகளை வேட்டையாட ஆவணம் எதுவுமின்றி நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.



இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...