‌நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் - உடுமலை நகராட்சி வழங்கியது!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நடைபாதை வியபாரிகள் எழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்க உடுமலை நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் உள்ள நடைபாதை வியபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

உடுமலை ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மலிவான விலையில் நாள்தோறும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன் அடைவதற்கு சிறு மற்றும் சில்லறை வியாபாரிகள் பெரிதும் உதவிகரமாக உள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்களுக்கு கைகொடுத்து உதவும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டு உள்ளது.

இந்த வண்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. உடுமலை நகர மன்றத் தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் முன்னிலையில் 10 வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...