கோவையில் தேவாலயத்தில் புகுந்து தகராறு: 8 பேர் மீது வழக்கு

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி நடந்த  அறுவடை விழாவின் போது தகராறில் ஈடுபட்ட 8 பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர்


கோவை: கோவை தேவாலயத்தில் புகுந்து தகராறு செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி அறுவடை விழா நடந்தது

அப்போது, சி.எஸ்.ஐ., தேவாலயத்தின் நிர்வாகிகள் என்று கூறி சிலர், அங்கு நுழைந்து அறுவடை விழாவை நடத்தக்கூடாது என தகராறில் ஈடுபட்டு, பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயன்றனர்.

அறுவடை விழாவிற்காக பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.10 லட்சம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றனர். இதுகுறித்து, கிறிஸ்தவ மத போதகர் பிரபு டேனியல், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

ரேஸ்கோர்ஸ் போலீசார், டேவிட் சாலமன், 50, ராபின்சன் சாலமன், 45, பரணபாஸ் வசந்தகுமார், 49, பிரபாகரன், 48, நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48, ஜோஸ்வா, 47 ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...