எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் கோவை ஆட்சியர்

கோவை மாவட்டன் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, வெள்ளானைப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்க நியாய விலை கடையின் விற்பனையாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்டன் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, வெள்ளானைப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கவிதா, உதவி இயக்குநர் பேரூராட்சி துவாரகநாத் சிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32.75 இலட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டும்பணி மற்றும் இ.எஸ்.ஐ மருந்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர், கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7.31 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுவரும் பணி, நஞ்சுண்டாபுரத்தில் ரூ.2.63 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து கள்ளிப்பாளையம் நியாயவிலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டை தாரர்களுக்கு விற்பனை முனைய விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை இயந்திரத்தினை இயக்கி ஆய்வு செய்தார், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் நியாயவிலைகடையின் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.



மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.481 இலட்சம் மதிப்பீட்டில் ஓம் முருகா நகர் மெயின் ரோடு முதல் மேற்கு சக்திவேல் வீடு வரை சாலைகளில் பேவர் பிளாக்குகள் அமைக்கும் பணி. ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ஓம் முருகா நகரில் ரூ 4 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.67 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும். ரூ.140 இலட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சி குழி அமைக்கும் பணி, வெள்ளானைப்பட்டி போஸ்டல் காலனி அருகில் ரூ.769 இலட்சம் மதிப்பீட்டில் சுங்கன்பாண்டு அமைக்கும் பணி, கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.57,53 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளானைப்பட்டி முதல் மோளப்பாளையம் வரை ரோடு புதுப்பிக்கும் பணி, அண்டக்காபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.3 இலட்சம் மதிப்பீட்டில் தென்னை மரங்களை சுற்றி வட்ட பாத்தி அமைக்கும் பணி, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.82 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய சமுதாய் சுகாதார வளாகம் கட்டும் பணி கைக்கோலபாளையத்தில் ரூ.11.70 இலட்சம் மதிப்பீட்டில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணி உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...