கவுண்டம்பாளையம் அருகே வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பு - லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு வீரர்கள்

கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு அடி நீளமுள்ள நாகபாம்புவை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஆனைக்கட்டி வனப்பகுதியில் விட்டனர்.


கோவை: வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென வந்த நாகப்பாம்புவை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கினர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் திருவள்ளுவர் வீதியில் வசிப்பவர் ஸ்ரீதர். சொந்தமாக கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று இவரது வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தபோது, தீடிரென நாகபாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர்கள் சத்தம்போட அங்கு வந்த ஸ்ரீதர் உடனடியாக டப்பா வைத்து நாகபாம்பை மூடி வைத்துவிட்டு கவுண்டம்பாளையத்திலுள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டப்பா வைத்து மூடி வைக்கப்பட்டு இருந்த நாகபாம்பை பிடித்தனர். அப்போது அந்த பாம்பு 2 அடி தான் இருந்தது. ஆனால் என்னை பிடிக்க வந்தது யார் என்று கேட்பதுபோல படமெடுத்து பயத்தை அங்கிருந்தவர்களுக்கு காட்டியது.



உடனே வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்டி எடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் அந்த பாம்பை ஆனைகட்டி மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 2 அடி உள்ள பாம்பை பிடிக்க தண்ணீருடன் இருந்த தீயணைப்பு லாரியை எடுத்துக்கொண்டு வரவேண்டிய நிலைமை இருந்தது. இதுபோன்ற இடத்திற்கு செல்ல சின்ன வாகனம் தீயணைப்பு துறைக்கு கொடுத்தால் அவர்கள் விரைவாக வந்து வேலையையும் விரைவாக முடிக்க ஏதுவாக இருக்கும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...