இ - பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரி உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் இ-பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரியும் உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திருப்பூர்: வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ-பைலிங் நடைமுறை கொண்டு வருவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உடுமலை கச்சேரி வீதியில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் சார்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2, மாவட்ட கூடுதல் 4-வது நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அது தவிர உடுமலை தாசில்தார் அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ- பைலிங் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

அந்த முடிவினை எதிர்த்தும், இ-பைலிங் நடைமுறையை 6 மாதகாலம் ஒத்திவைக்க கோரியும், அதற்குள் பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் உடுமலை வக்கீல் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பிரபாகரன், துணைத் தலைவர் சிவராமன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், மூத்த, இளம் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...