மாநில அளவிலான தடகள போட்டி - தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தகுதி

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் தாராபுரம் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்


திருப்பூர்: தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் நடைபெற்றது.

அதில் பல்லடத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் 5 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் மாணவர் அன்புச் செல்வன் ஈட்டி எறிதல் போட்டியில் 44.38 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடமும், மாணவர் தர்ஷன் 1.65 மீட்டர் உயரம் தாண்டி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற அன்பு செல்வன் மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் மாநில அளவில் தடகளப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரை பள்ளி தாளாளர் டாக்டர் தங்கராஜ், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சகமாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...