தாராபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான 87 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தாராபுரத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 175 ஆகும்.


திருப்பூர்: மோட்டார் வாகன வழக்குகள் 18, உரிமையியல் வழக்கு 37, குற்றவியல் சிறு வழக்குகள் 26, காசோலை வழக்கு 3, வங்கி வாராக்கடன் வழக்கு 2, உள்பட மொத்தம் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைப்படி, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் குழவின் உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வட்ட சட்டப் பணிக்குழு தலைவரும் மற்றும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தலைமை தாங்கினார். குற்றவியல் நடுவர் எஸ்.பாபு முன்னிலை வகித்தார்.

அப்போது கடந்த 19.5.2022 தேதி சென்னிமலை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (42), மோட்டார் சைக்கிளில் சென்ற போது குண்டடம் அருகே கார் விபத்தில் இறந்தார். இதுதொடர்பாக அவருடைய மனைவி மற்றும் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் எஸ்.டி.சேகர் வாதாடி வந்தார்.

இதில் விபத்தில் இறந்து போன விஜயகுமாருக்கு ரூ.22 லட்சம் வழங்க நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டு அதற்கான ஆணையை மனைவி ஜெகதா மற்றும் தாயார் சின்னம்மாள் ஆகியோருக்கு முகாமில் வழங்கினார்.

இதில் மோட்டார் வாகன வழக்குகள் 18, உரிமையியல் வழக்கு 37, குற்றவியல் சிறு வழக்குகள் 26, காசோலை வழக்கு 3, வங்கி வாராக்கடன் வழக்கு 2, உள்பட மொத்தம் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 175 ஆகும். 325 பயணாளிகள், மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன் பெற்றனர். இதில் வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...