திருப்பூரில் இரண்டாவது வாரமாக வேர்கள் அமைப்பு சார்பில் பனை விதைகள் விதைப்பு

திருப்பூரில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் சார்பில் மூளி குளத்தில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்குப் பணி நடைபெற்றது.


திருப்பூர்: பனை மரங்களை காப்பாற்றவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குளத்தில் பனை விதைகள் விதைக்கப்பட்டதாக வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு மண்ணரை அருகில் உள்ள மூளி குளத்தில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் சார்பில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.



அழிந்து வரும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்போம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவோம், நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துவோம், பனை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்போம், பனைப் பொருளாதாரத்தை மீட்போம், இயற்கை சீற்றத்திலிருந்து காப்போம், பனை விதைப்போம், பனை காப்போம் என்று வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர். இன்று காலை உணவுக்கு ஏற்பாடு செய்த வேர்கள் அமைப்பு மற்றும் நண்பர்கள் குழுவினருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...