கோவையில் தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, பேதி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகில் கிருஷ்ணம்மாள் தனியார் மகளிர் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.


கோவை: மாணவிகளின் உடல்நிலை பிரச்சனைக்கு விடுதியில் வினியோகிக்கப்பட்ட சுகாதரமற்ற தண்ணீர் தான் காரணமாக என சுகாதார மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகில் கிருஷ்ணம்மாள் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கான விடுதி ஹோப்ஸ் சிக்னல் அருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதியில் மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே, சுமார் 30 மாணவிகள் விடுதியின் சார்பிலேயே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடனே விடுதி திரும்பினர்.

லேசான பாதிப்பு என்பதால் மாணவிகள் சிகிச்சை பெற்று அனைவரும் நலமுடன் விடுதி திரும்பி விட்டதாகவும், தண்ணீரில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இருக்கலாம் என்பதால் மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், கல்லூரியில் முறையாக சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை உறுதி செய்கிறோம் என கல்லூரி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், சம்மந்தப்பட்ட கல்லூரியில் சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவிலேயே குடிநீரில் ஏற்பட்ட மாசு தொடர்பான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வரும் 20ம் தேதி வரை ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும், கல்லூரியில் நேரடி வகுப்புகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை எல்லாம் முடிந்து மாடல் தேர்வுகள் நடைபெற உள்ளதாக கூறபடுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...