உடுமலை அருகே சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு

உடுமலை அருகே கூலி தொழிலாளர்கள் பேருந்துக்காக சாவடி அருகே காத்து இருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: உடுமலைப்பகுதிகளில் நேற்றிரவு முதல் செய்த தொடர் மழையால் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் கொழுமம் ஊராட்சி பகுதியில் உள்ள சாவடி எனப்படும் தங்கும் விடுதி உள்ளது. இந்தப் பகுதியில் கூலித் தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக சாவடி அருகே பழனி செல்லும் பேருந்துக்காக காத்து இருந்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளர்கள் மணிகண்டன் (28), கௌதம்(29), முரளி ராஜன்(35) ஆகியோர் படுகாயம் அடைந்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடுமலை அரசு மருத்துவமனையில் மூவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.



நேற்று நள்ளிரவு முதல் இப்பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்து இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடுமலை அருகே கூலி தொழிலாளர்கள் பேருந்துக்காக சாவடி அருகே காத்து இருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...