வலு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாணவன் சாதனை - விளையாட்டு வீரருக்கு அமைச்சர் கயல்விழி பாராட்டு

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் தாராபுரம் பகுதியைச் கல்லூரி மாணவன் முகமது சபீர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த மாணவன் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை சந்தித்து ஆசி பெற்றார்.


திருப்பூர்: வலு தூக்கும் விளையாட்டில் சாதனை படைத்த மாணவனுக்கு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.



கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் தாராபுரம் பகுதியைச் கல்லூரி மாணவன் முகமது சபீர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் ஓட்டுநர் இவரது இரண்டாவது மகன் முகமது சபீர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருகிறார். இவர் வலுதூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு பள்ளி படிப்பு காலத்திலேயே பல்வேறு போட்டிகளில் இளையோர் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் முதல் பரிசை வென்றுள்ளர்.

இதனிடையே கர்நாடகாவில் உள்ள வலுத்தூக்கும் அமைப்பு சார்பில் போட்டிகள் அக்டோபர் 12 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற மாணவர் முகமது சபீர் தேசிய அளவிலான பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவன் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சந்தித்து ஆசி பெற்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...