கேரளாவில் நடைபெற்ற தேசிய ஹாண்ட்பால் போட்டி - கோவை கற்பகம் பல்கலைக்கழகம் சேம்பியன்

கேரளாவில் நடந்த இந்திய அளவிலான ஹாண்ட்பால் போட்டியில் கோவை கற்பகம் பல்கலைக்கழகம் அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.


கோவை: .வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி, பதிவாளர் முனைவர் பழனிசாமி ,உடற்கல்வி இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினார்.

கடந்த 14-15ஆம் தேதி அகில இந்திய அளவிலான ஹாண்ட்பால் போட்டி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் 16க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. முதல் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும், DSA SPORTS HOSTEL திருவனந்தபுரம் அணியும் எதிர்கொண்டன. இதில் 27 - 22 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது.

முதல் காலிறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் MEG ARMY பெங்களூர் அணியை எதிர்கொண்டது. இதில் 28-25 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் MASTER CLUB போர்ட் கொச்சி அணியை எதிர்கொண்டது. இதில் 35-20 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் SACRED HEART College, தேவாரம் கேரளா அணியை எதிர்கொண்டது. இதில் 39- 36 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.



வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் பழனிசாமி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...