கோவையில் புதியதாக கட்டப்பட்ட சிறுவர் பூங்கா சுற்றுச்சுவர் - எம் பி நடராஜன் திறந்து வைத்தார்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்து நகர் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா சுற்றுச் சுவரினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


கோவை: கோவையில் சிறுவர் பூங்காவின் சுற்றுச்சுவரை திறந்து வைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொண்டார்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட முத்து நகர் பகுதியில் நாடாளு உறுப்பினர் நிதியில் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா சுற்றுச் சுவரினை கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதே போல் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு எம்.ஆர்.ஜி நகர் புதிய ரேசன்கடையில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினர்.



கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வது 9வார்டு முத்துநகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் கோவில் பகுதியில் அதற்கான சுற்றுச் சுவர் அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் ஒதுக்கி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.



இதன் திறப்பு விழாவானது நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் தலைவர் மரகதம் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

சிறுவர் பூங்கா சுற்றுச் சுவற்றினை பாராளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜனுக்கு முத்துநகர் பொதுநல சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.



இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ராமதாஸ், செயலாளர் தேவராஜ், ஆலோசகர் பாஸ்கரன், ஆலய பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதரன், வார்டு உறுப்பினர் சித்ரா மற்றும் முத்து நகர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் சுந்தரராஜன் நன்றியுரை வழங்கினார்.



அதேபோல் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு எம்.ஆர்.ஜி நகர் புதிய ரேசன்கடையில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுகுழு உறுப்பினர் வீரபத்திரன், துணைத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...