விபத்தில் சிக்கிய வாகனத்திற்கு போலி இன்சூரன்ஸ் - ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அதிகாரி புகார்

திருப்பூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் மீது போலியாக இன்சூரன்ஸ் காப்பீடு வைத்துள்ளதால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் புகார் அளித்துள்ளார்.


கோவை: போலியாக இன்சூரன்ஸ் தயாரிக்கும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் மீது போலியாக இன்சூரன்ஸ் காப்பீடு வைத்துள்ளதால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இன்சூரன்ஸ் அதிகாரி அருண் குமார், திருப்பூர் மாவட்டம் தெற்கு காவல் காவல் நிலையம் எல்லைகுட்பட்ட பகுதியில் விபத்து நடைபெற்றது. விபத்தில் 33 வயது பெண் சாலையை கடக்கும் போது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இது தொடர்பாக இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் பரிசோதிக்கும் போது விபத்து ஏற்படுத்திய வாகனம் போலியாக இன்சூரன்ஸ் தயாரித்துள்ளது.ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் அந்த வாகனத்திற்கு எந்த விதமான இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை. ஆனால் அந்த வாகனத்தில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸில் காப்பீடு போட்டதாக பதிவுகள் உள்ளது.

இதுபோல் போலியாக இன்சூரன்ஸ் தயாரிப்பதினால் விபத்தில் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்க முடியாது எனவும், இதுபோல் போலியாக இன்சூரன்ஸ் தயாரிக்கும் நபர்கள் மீது காவல்துறையை வழக்கு பதிவு செய்து அவர்கள் தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அந்த குழந்தைகளுக்கு தற்போது எந்தவிதமான நிவாரணம் அளிக்க முடியவில்லை. பொதுமக்கள் சரியான முகவரிகளிடம் இன்சூரன்ஸ் காப்பீடு போடுமாறு வலியுறுத்தினார். இது குறித்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரிடம் கேட்கும்போது அவரும் ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டார் வாகனம் சட்டப்படி உரிய ஆவணங்கள் இருந்தால் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இழப்பீடு வழங்கப்படாத மாட்டாது என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...