பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றியவரின் கடைக்கு சீல் வைப்பு - திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்பு இடத்தில் அமர்ந்ததற்காக பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கடைக்கு உதவி ஆணையர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.


 திருப்பூர்: சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது.



ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் ஆவின் என்ற பெயரில் உள்ள பேக்கரி முன்பாக அமர்ந்திருந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.



ஏற்கனவே கடையின் வெளியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில் கடையின் வழித்தடத்தில் அமர்ந்திருந்ததாக குற்றம் சாட்டிஅந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றியது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அவமரியாதையாக பேசி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையாளர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடையின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடையை பூட்டி சீல் வைத்தனர்.



இச்ச சம்பவத்தால் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...