உடுமலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது.


திருப்பூர்: உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கடைகளில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை ஆன நிலையில் தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு இரு மடங்கு விலை உயர்ந்து உள்ளது.



மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பூக்கள் வருவதாகவும் தற்சமம் உடுமலைபேட்டையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ 300 ரூபாயிலிருந்து 400க்கும், சம்மங்கி பூ 300 லிருந்து 500 வரையும், அரளி 700 ரூபாய்க்கும், மல்லிகை பூ ரூ.1000 லிருந்து ரூ.1500 வரையிலும், முல்லை பூ கிலோ ரூ 800 க்கும், கோழிக் கொண்டை பூ 150, ஜாதி மல்லிகை ஒரு கிலோ 600 ரூபாய், தாமரை பூ ஒன்று 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...