கோவையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

நவம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.


கோவை: உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சி குளம் ஆகிய பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.



நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கமாக மழை பெய்ய கூடும். மழை பெய்வதற்கு முன்பு பல்வேறு இடங்களில் பனி மூட்டம் காணப்படுவது வழக்கம்.



அதன்படி நவம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.



உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சி குளம் ஆகிய பகுதிகள் பனிமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் கோவையில் அதிகாலையில் வழக்கமாக இருக்கும் குளிர்ச்சியான சூழலை விட அதிக அளவிலான குளிர்ச்சி நிலவியது.



மேலும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...