உடுமலையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

உடுமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்தவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிவசக்தி காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த தகவலையடுத்து, தலைமை காவலர் பத்ரா அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த சிவலிங்கம் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ அளவில் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவருக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கு உறுதியாக இருந்த ஏரி பாளையத்தைச் சேர்ந்த தியாகு என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...