உடுமலை அருகே புலி உயிரிழப்பு - வனத்துறை விளக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட புலி தொடர்பாக வனத்துறை தங்களது விளக்கத்தை அளித்திருக்கிறது.


திருப்பூர்: பன்றியின் முட்கள் குத்தியதால் புலி உயிரிழந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.



ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், அமராவதி வனச்சரகம், அமராவதி பிரிவு, கல்லாபுரம் சுற்று கழுதை கட்டி ஓடைப்பகுதியில் நேற்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் புலிக்கு, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன் தலைமையில், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா, உதவி இயக்குனர் கணேஷ் ராம், அமராவதி வனச்சரக அலுவலர், ஆரண்ய அறக்கட்டளை செயலாளர், இயற்கைகான உலகலாவிய நிதியம், சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு முன்னிலையில், வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், ராஜன், ராஜா சொக்கப்பன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினரால், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



இறந்த ஆண் புலிக்கு சுமார் 9 வயது இருக்கும் என மருத்துவ குழுவினரால் உறுதி செய்யப்பட்டது. புலியின் இறப்பானது முள்ளம் பன்றியை வேட்டையாடும் பொழுது முள்ளம் பன்றியின் முட்களால் அதன் முன் கால்கள் மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வீக்கம் ஏற்பட்டு உள்பகுதியில் சீல் பிடித்த நிலையில் வேட்டையாட முடியாத சூழ்நிலையில் அதன் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவக் குழுவினரால் உறுதி செய்யப்பட்டது.

மேலும் முள்ளம் பன்றியின் முட்கள் புலியின் கால் மற்றும் இரைப்பை பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.



மேலும் புலியின் சடலம், பற்கள் மற்றும் நகங்கள் ஆகியவை எரியூட்டப்பட்டது. என வனத்துறை தரப்பில் தெரிவிக்கபட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...