பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் ஐ.ஜி பிரமோத்குமார் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களை 4ம் தேதி ஆஜராக கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கோவை: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கோவை சிறப்புநீதிமன்றம் அதிரடிஉத்தரவு.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாசி பாரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணத்தை திரும்பி தராமல் 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்துள்ளது.

இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை காப்பாற்றுவதற்காக ரூ.2.50 கோடி லஞ்சமாக பெற்றதாக அப்போதைய மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் 10 ஆண்டுகளாக குற்றச்சாட்டு பதிவு செய்யபடாமல் இருந்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றசாட்டு பதிவு செய்ய வேண்டும் என கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து 2 முறை குற்றம்சாட்டவர்களில் பிரோத்குமார் தவிர மற்ற 4 பேரும் ஆஜராகினர். பிரமோத்குமார் ஆஜர் ஆகாமல் கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி தற்போது கரூரில் உள்ள செய்திதாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜி-க்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ஐஜி பிரமோத் குமார் இன்று காலை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிடிவாரண்டை தள்ளுபடி செய்து உள்ளார். இந்த வழக்கில் பிரமோத்குமாரை விடுவிப்பது குறித்து மனு அளிக்கப்பட்ட நிலையில் இம்மனு மீதான விசாரணை வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நவம்பர் 4-ம் தேதி அன்று ஐ.ஜி. பிரமோத்குமார்,அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...