உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.


திருப்பூர்: அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஆண்டுதோறும் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக அக்டோபர் மாதத்தில் வாக்காளர் வரைவுப்பட்டியலும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி முதல் தொடங்கியது. அதன் தொடக்கமாக தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி அளவிலான பட்டியலை உடுமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் வெளியிட்டார்.

அதன் படி கடந்த 05.01.23-ம் தேதி படி உடுமலை சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 918 ஆண்கள்,1லட்சத்து 34 ஆயிரத்து 982 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ஆக மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 927 வாக்காளர்கள் இருந்தனர்.

பின்னர் புதிதாக 1075 ஆண்களும்,1300 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 2 ஆயிரத்து 376 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இதில் திருத்தங்கள் மேற்கொண்டு 2 ஆயிரத்து 131 ஆண்களும், 2 ஆயிரத்து 288 பெண்களும் ஆக மொத்தம் 4 ஆயிரத்து 419 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். 27.10.2023 தேதி படி 1லட்சத்து 23 ஆயிரத்து 862 ஆண்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 994 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 28 பேர் என உடுமலை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 884 வாக்காளர்கள் உள்ளனர்.

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் 05.01.2023 தேதி படி 1 லட்சத்து 13 ஆயிரத்து 907 ஆண்கள், 1லட்சத்து 19 ஆயிரத்து 452 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ஆக மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 379 வாக்காளர்கள் இருந்தனர்.

பின்னர் புதிதாக 806 ஆண்கள்,1104 பெண்கள் என 1964 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இதில் திருத்தங்கள் மேற்கொண்டு 2ஆயிரத்து 741 ஆண்களும், 2ஆயிரத்து 865 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர் 2 ஆக மொத்தம் 5 ஆயிரத்து 608 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். 27.10.2023 தேதி படி 1 லட்சத்து 12 ஆயிரத்து 026 ஆண்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 691 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 735 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்குமுதல் டிசம்பர் மாதம் 9-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த மாதம் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேரத்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.

பரிசீலனைக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5- ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலை உடுமலை திமுக நகரச் செயலாளர் சி.வேலுச்சாமி,நகரமன்ற துணைத் தலைவர் எஸ்.கலைராஜன், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சௌந்தரராஜன், பகுஜன் சமாஜ் கட்சி ஜே.பெஞ்சமின் கிருபாகரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர். அப்போது ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் ஜலஜா, உடுமலை தாசில்தார் சுந்தரம், மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி, தேர்தல் துணை தாசில்தார்கள் சையது ராபியம்மாள், வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...