உடுமலை அரசு மருத்துவமனை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு மருத்துவமனை அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு ஆஸ்பத்திரி அலுவலகம் இயங்கி வருகிறது. பழமை வாய்ந்த இந்த கட்டிடமும் அதன் சுற்றுச்சுவரும் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து சுவர் சாய்ந்த நிலையில் உள்ளது.உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அந்த சுவற்றை இடித்து ஆற்றக்கோரி கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு அலட்சியம் கூட பெரிதளவில் விபத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் உணரவில்லை.

இதனால் அங்கு நிறுத்தப்படுகின்ற ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அலுவலகத்துக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே சரவணா வீதியில் செயல்பட்டு வரும் உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்றுவதற்கு முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...