அண்ணாமலைக்கு பேனர் வைக்க மறுப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்கு

சூலூரில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது அண்ணாமலைக்காக வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அண்ணாமலை வருகைக்காக கருமத்தம்பட்டி பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களை பொது இடங்களில் வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.



இதன் காரணமாக நான்கு ரோட்டில் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



மேலும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகி உத்தரவின் பேரில் ஆய்வாளர் அன்னம் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர்கள் மூவரையும் நேரில் விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள கண்டித்து பாஜகவினர் சமூக வலைதளங்கள் கண்டன பதிவை பதிவிட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...