கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழா

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்கள்.


கோவை: உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழாவில், செங்கோல் நிறுவும் போது பண்ணிசை பாடிய ஓதுவாமூர்த்திகளுக்கு பத்தாயிரம் பொற்கிளியும் நினைவுப் பரிசும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்கள்.



பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் போது பண்ணிசை பாடிய ஓதுவாமூர்த்திகளுக்கு பத்தாயிரம் பொற்கிளியும் நினைவுப் பரிசும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.



மதுரை பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு இந்து மதசண்டா மருதம் என்ற பட்டத்தினை சுவாமிகள் வழங்கி சிறப்பித்தார்.



விழாவில் தமிழகத்தைச் சார்ந்த சிறப்பு மிக்க 50 கலைஞர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மலேசியா நாட்டின் டத்தோ M.ராமன் அவர்கள், பேராசிரியர் வடலூர் சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் டாக்டர் அருள்நாகலிங்கம் அவர்கள், டாக்டர் M.மாரியப்பன் அவர்கள் மதுரை திருமாறன் ஜி அவர்கள், நாட்டுப்புற கலைஞர்களின் கூட்டமைப்பு தலைவர் கானை நா.சத்தியராஜ் அவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஆதீன உலக சமாதான தெய்வீகப் பேரவை செயலாளர் ம.வே.நடராஜன் வரவேற்புரை வழங்க, ஆதீன மேலாளர் க.ஆனந்த பாரதி நன்றியுரை வழங்க திருமுறை இசையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...